படேல்கள் சமுதாயத்தினருக்காக இட ஒதுக்கீடு கேட்டு போராடி சிறை சென்ற ஹர்திக் படேலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால் 6 மாதங்கள் குஜராத் மாநிலத்தில் அவர் தங்கக்கூடாது என்று தடை உத்தரவும் பிறப்பித்துள்ளது.
ஹர்திக் படேல் மீது தேசத் துரோக வழக்கு இருப்பதால் பாஸ்போர்ட்டை போலீஸிடம் ஒப்படைக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2015 ஜூலை மாதம் ஹர்திக் படேல் பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் படேல்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தை தொடங்கினார், ஆனால் இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து அக்டோபர் 2015-இல் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார். இவர் மீது 2 தேசத் துரோக வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இவர் பேசியதாக வெளியான வீடியோ ஒன்றில், அதிருப்தியடைந்த படேல் பிரிவு இளைஞர் ஒருவரிடம் தற்கொலை செய்து கொள்வதற்கு பதிலாக சில போலீஸ்காரர்களைக் கொல் என்று ஹர்திக் கூறியது வைரலானது, இதனைத் தொடர்ந்து சூரத் போலீஸால் இவர் முதலில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அகமதாபாத் போலீஸும் இவரையும் இவரது சகாக்களையும் கைது செய்தனர். வன்முறையான கிளர்ச்சி மூலம் மாநில அரசை கவிழ்க்க முயற்சி செய்ததாக அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஹர்திக் படேல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார், ஆனால் குஜராத்துக்குள் 6 மாதங்களுக்கு இவரால் செல்ல முடியாது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago