காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி தனது புதிய மகன் ரோஹித்துடன் நைனிடால் தொகுதியில் 10 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து என்.டி. திவாரி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
உத்தரகண்ட் மாநிலம் நைனி டால் தொகுதியில் நான் போட்டி யிடுவதா அல்லது எனது மகன் ரோஹித் போட்டியிடுவதா என்பது குறித்து மக்களின் கருத்தறிய இப்போது சுற்றுப் பயணம் மேற் கொண்டிருக்கிறேன்.
இந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிதான் எனக்கு முக்கியம். காங்கிரஸ் கட்சி சார்பில் எனக்கோ அல்லது எனது மகனுக்கோ யாருக்கு சீட் கொடுத்தாலும் பரவாயில்லை. எனது மகன் ரோஹித் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்துள்ளார். திறமையான இளைஞர். அவர் நைனிடால் தொகுதியில் போட்டியிட நான் ஆதரவாக இருப்பேன் என்றார்.
ரோஹித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி சார்பில் எனது தந்தைக்கு சீட் வழங்க வேண்டும் என்றே விரும்புகிறேன். ஒருவேளை மக்கள் எனக்கு ஆதரவு அளித்தால் எனது தந்தையின் ஆசியுடன் இந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago