நம் நாடு இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தம், இதில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குஜராத் மாநிலம், சூரத் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாடும் கட்டமைக்கப்படுவதும், இயங்குவதும் அரசாங்கங்கள், அரசர்கள் மற்றும் அரசியல்வாதி களால் அல்ல. நாட்டு மக்களின் சேவை மற்றும் கடின உழைப்பால் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது, இயங்குகிறது. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அரசு செயல்பட முடியாது. எனவே நாட்டுக்காக அனைத்து மக்களும் பாடுபடவேண்டும்.
கூட்டு சமூக பொறுப்புணர்வு மீதான நம்பிக்கையால் நமது நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சத்திரங்கள், கிணறுகள், கோசாலைகள் மற்றும் நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை அரசாங்கத்தால் கட்டப்படவில்லை, மக்களாலேயே கட்டப்பட்டுள்ளன.
விடுதலைக்குப் பிறகு நம் மிடம் இருந்த கூட்டு சமூகப் பொறுப் புணர்வு மங்கத் தொடங்கி விட்டது. ஆனால் இந்த நம்பிக்கையை புதுப்பிப்பதற்காக நாம் மீண்டும் இத்திசையில் பயணிக்கிறோம்.
நம் நாடு இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தம், இதில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
ரூ.400 கோடி செலவில் 550 படுக்கை வசதியுடன் கட்டப்பட்ட கிரண் உயர் சிகிச்சை மருத் துவமனையை இந்நிகழ்ச்சியில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சிறுமியால் பரபரப்பு
சூரத் நகரில் நேற்று விமான நிலையம் நோக்கி பிரதமர் காரில் செல்லும்போது, திரளான மக்கள் மத்தியில் நான்சி என்ற 4 வயது சிறுமி அவரது கவனத்தை ஈர்த்தாள். தனது காரை நோக்கி அச்சிறுமி தயக்கத்துடன் முன்னேறும்போது, பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்துவதை பிரதமர் கண்டார். உடனே காரை நிறுத்தச் சொன்ன பிரதமர், சிறுமியை அழைத்துவரச் சொன்னார். காரிலிருந்து இறங்கி சிறுமியிடம் சில வார்த்தைகள் பேசிய பிரதமர், பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிறுமியுடன் பிரதமர் பேசும் போது அங்கிருந்த மக்கள், ‘மோடி, மோடி’ என உற்சாக குரல் எழுப் பினர்.
பிரதமர் இதற்கு முன் பலமுறை பாதுகாப்பு வளையத்தை மீறி இதுபோல் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இது வாகும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago