இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு கொடுத்தனர்.
திமுக எம்.பி.க்கள் கொடுத்த மனுவில்: "கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க இரு நாட்டைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள், அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மூலம், மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 1-ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ கலந்துரையாடல் நடைபெற்றது. டெசோ ஆலோசனை கூட்டத்தில், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் பிரதமரிடம் இன்று திமுக எம்.பி.க்கள் மனு கொடுத்துள்ளனர் என திமுக தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago