சுனந்தா புஷ்கர் மரணம்: போலீஸ் அறிக்கைக்காக காத்திருக்கிறேன் - முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர் பேச்சு

By பிடிஐ

தனது மனைவியின் மரணம் தொடர்பான காவல் துறையினரின் அறிக்கைக்காக காத்திருப்பதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.

காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தொடக்கத்தில் தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால், கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதனிடையே சுனந்தாவின் பிரேதத்தை பரிசோதனை செய்த 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர், தற்போது புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அதில், விஷம் காரணமாகத்தான் சுனந்தா இறந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, “சட்டரீதியான நடவடிக்கையை அரசியலாக்க பாஜக முயற்சிக்கிறது” என்றார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: “நான் எதையும் மறைக்கவில்லை. தொடக்கத்திலிருந்தே போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். எனது மனைவியின் மரணம் தொடர்பாக அவர்களிடம் அறிக்கையொன்றை கோரியிருக்கிறேன். அதற்காக இன்னும் காத்திருக்கிறேன். இதுவரை போலீஸாரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்