பிரதமர் வேட்பாளரை காங். அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளரை முன்னிலைப்படுத்துவது அவசியம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

30 ஆண்டு கால தமிழக அரசியலைக் குறிப்பிட்ட அவர், மாநிலத் தேர்தலோ அல்லது மக்களவைத் தேர்தலோ, மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கட்சியின் தலைவர் யார் என்பதை அறிவதில் ஆர்த்துடன் உள்ளதாக கூறினார்.

பாஜக தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸும் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்குதலில் இருக்கிறது.

நான்கு மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, உரிய நேரத்தில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், ஜனவரி 17-ம் தேதி நடைபெறவுள்ள அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சிலரும் பகிரங்கமாக விருப்பம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்