மகாராஷ்டிர முதல்வருக்கான போட்டியில் தான் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக அந்த கட்சியின் சார்பில் யாரை முதல்வராக அறிவிப்பது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
முதல்வர் பதவிக்கான பட்டியலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பங்கஜா முண்டே, தேவேந்திர பட்நவீஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, "தற்போது நான் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளேன். இங்கு இருக்கவே விரும்புகிறேன். முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இடம்பெறவில்லை" என்றார்.
இருப்பினும் பாஜக உயர்மட்ட தலைவர்கள் மத்தியில் நிதின் கட்கரிக்கான ஆதரவு தொடர்கிறது.
முன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிர முதல்வர் ஆக விரும்பினால், அவருக்காக, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று நாக்பூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ண கோப்தே தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தொகுதிகளில் நிதின் கட்கரி போட்டியிடவில்லை என்பதும் அவரது சொந்த ஊர் நாக்பூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago