தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரனைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சார்பில், அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங் நீக்கப்பட்டதற்கான அரசாணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் பட்டியலில் இருப்பவர் மட்டுமே ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்ற முடியும் என்பதால் பவானி சிங் அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா வழக்கின் விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங்கை நீக்க வேண்டும் என பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி போபண்ணா, அன்பழகனின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கும், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கும் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து ஆகஸ்ட் 25-ம் தேதி பவானி சிங்கை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டது. அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங்கை நீக்கியது சட்டபடி தவறு என ஆகஸ்ட் 26-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா ரிட் மனு தாக்கல் செய்தார். இதனிடையே, செப்டம்பர் 16-ம் தேதி அன்பழகன் மனு மீது நடைபெற்ற விசாரணையில், ஜெயலலிதாவை மூன்றாவது தரப்பாக சேர்த்துக் கொள்வதாக பெங்களூர் உயர் நீதிமன்ற நீதிபதி போபண்ணா உத்தரவிட்டார்.
இந்நிலையில், அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங் திடீரென நீக்கப்பட்டதால் செப்டம்பர் 19-ம் தேதி பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் வரவிருக்கிற அன்பழகனின் மனு தள்ளுபடி செய்யப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் பணி கர்நாடக தலைமை செயலக வட்டாரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago