நாட்டின் பொருளாதாரம் சரிந்ததற்கு நிதி அமைச்சர் ப.சிதம்பரமே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.
விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஆகியவை தொடர்பாக 18 கேள்விகள் அடங்கிய பட்டிய லையும் சிதம்பரத்துக்கு அனுப்பி இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா.
இதுபற்றி நிருபர்கள் கூட்டத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறிய தாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் 4 ஆண்டு கள் (2004-2007) பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்து காணப் பட்டதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடங்கிய நட வடிக்கைகளே காரணம். ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளால் அல்ல.
நாங்கள் விதைத்தோம், நீங்கள் அறுவடைசெய்தீர்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால ஆட்சியின் குளறு படிகளால் மீண்டும் பொருளா தாரம் தலைகுப்புற சரிந்துவிட்டது.
7 தொடர் காலாண்டுகளில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. 2013-14-ன் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஒட்டுமொத்த பொரு ளாதார வளர்ச்சி வெறும் 4.7 சதவீதமே.
கடந்த மார்ச் 19-ம் தேதி தேர்தலில் போட்டியிடவில்லை என சிதம்பரம் அறிவித்ததுமே பங்குச்சந்தைகளில் உள்ளவர்கள் வரவேற்றனர். மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்தது.
வேலைவாய்ப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 1.5 கோடி வேலை வாய்ப்புகளே உருவானது. 2008-2102 இடையே பணவீக்க அளவு சராசரியாக ஆண்டுக்கு 10 சதவீதமாக உயர்ந்தது.
நிதிப் பற்றாக்குறையை 5 சதவீதமாக கட்டுக்குள் வைக்க நீங்கள் பின்பற்றிய வழிகள் சரியா னவை அல்ல. திட்டமிடல் மற்றும் உற்பத்தித் துறைக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் கணிசமாகக் குறைக்கப்பட்டது.
நமது பொருளாதாரம் மீதான நம்பிக்கை நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அதனால் நுகர்வும் மூலதனமும் குறைந்துள்ளது என்றார் யஷ்வந்த் சின்ஹா.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago