திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி, மகா ரதத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகனங்களில் உற்சவரான மலையப்ப சாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை மகா தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி மகா ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ரதத்தை ஏராளமான பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளில் பவனி வந்த ரதத்துக்கு முன்பு, யானை, குதிரை பரிவட்டங்கள் சென்றன. மேலும் மேள தாள வாத்தியங்களுடன் நடனக் கலைஞர்கள் நடனமாடி யபடி சென்றனர். இதனைத் தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் மலையப்ப சாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை கோயில் அருகே உள்ள புஷ்கரணியில் (குளத்தில்) சக்கர ஸ்நானம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பிரம்மோற் சவ கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
30 மணி நேரம் காத்திருப்பு
தசரா விடுமுறை, பிரம்மோற் சவம், புரட்டாசி 3-வது சனிக்கிழமை ஆகிய காரணங்களால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 கம்பார்ட்மெண்ட்டுகள் நிறைந்து வெளியில் சுமார் 3 கி. மீட்டர் தூரத்துக்கு சர்வ தரிசன பக்தர்கள் காத்திருந்து சாமியை தரிசித்தனர். பாதசாரியாக வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய 17 மணி நேரம் ஆனது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago