மக்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் செலவு வரம்பு ரூ.70 லட்சமாக அதிகரிப்பு

வரும் மக்களவைத் தேர்தலின் போது வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணை யம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதேபோல் சட்டமன்றத் தேர்தல்களின்போது வேட்பாளர்க ளின் தேர்தல் செலவு வரம்பு ரூ.28 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் விலைவாசி உயர் வுக்கு ஏற்ப வேட்பாளரின் தேர்தல் செலவு வரம்பு மாற்றி அமைக் கப்படுகிறது. அதன் அடிப்படை யில் மக்களவைத் தேர்தலை முன் னிட்டு வேட்பாளர் தேர்தல் செலவு குறித்த புதிய பரிந்துரைகளை மத்திய அரசிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் அண்மையில் சமர்ப்பித்தது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை டெல்லியில் வெள் ளிக்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய பரிந்துரை களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் என்ற அடிப் படையில் அந்தந்த மாநிலங் களுக்கு ஏற்றவகையில் தேர்தல் செலவு உச்ச வரம்பு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகம் உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் மக்களவைத் தொகுதி வேட்பாளரின் தேர்தல் செலவு அதிகபட்சமாக ரூ.40 லட்ச மாக இருந்தது. தற்போது தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் கோவா உள்ளிட்ட சிறிய மாநிலங்களில் வேட்பாளர் தேர்தல் செலவு ரூ.22 லட்சமாக இருந்தது. இப்போது சிறிய மாநிலங்களில் செலவு உச்ச வரம்பு ரூ.54 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் செலவு வரம்பு

டெல்லி சட்டமன்ற தேர்தல் செலவு வரம்பு ரூ.14 லட்சமாக இருந்தது. இந்த வரம்பு தற்போது ரூ.28 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE