ஹரியாணா முதல்வரின் கன்னத்தில் அறைந்த இளைஞர்

By செய்திப்பிரிவு

ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடாவின் கன்னத்தில் அறைந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். பானிபட்டில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க சென்ற போது இச்சம்பவம் நடைபெற்றது.

பானிபட்டில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடோ ஞாயிற்றுக்கிழமை சென்றார். அப்போது திறந்த ஜீப்பில் நின்றபடி சாலையோரத்தில் காத்திருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி அவர் சென்றார்.

கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர், பாதுகாவலர்களை விலக்கிக்கொண்டு முதல்வரின் அருகே சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சியடைந்த ஹுடா உடனடியாக, அந்த இளை ஞரை பிடித்துத் தள்ளினார்.

அங்கிருந்த போலீஸார், அந்த இளைஞரை உடனடியாக அழைத் துச் சென்றனர். அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்த இளைஞரின் பெயர் கமல் முகிஜா. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், திடீரென முதல்வரின் கன்னத்தில் அடித்துள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்