'தூய்மை இந்தியா' பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் என்ற பிரதமர் அழைப்பை ஏற்றார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்.
'ஸ்வச் பாரத்' ('தூய்மை இந்தியா') என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட 9 பேருக்கு அவர் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகள் சார்ந்த பிரபலங்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தானும் பிரதமரின் அழைப்பை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமரின் 'தூய்மை இந்தியா' பிரச்சாரத்தில் இணைவதை பெருமையாக கருதுகிறேன். புக்காரஸ்ட் நகரில் இப்போதுதான் வந்திறங்கினேன். இந்தியா திரும்பியவுடன் ஏற்ற உறுதிமொழியை செயல்படுத்துவேன்" என பதிவு செய்துள்ளார்.
பிரதமரின் அழைப்பை ஏற்றிருந்தாலும், இத்திட்டம் வெறும் அடையாள பிரச்சாரமாக அமைந்துவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். சுத்தம் செய்வதுபோல் புகைப்படங்கள் எடுப்பதோடு நின்றுவிடக்கூடாது எனவும் சசி தரூர் கூறியுள்ளார்.
பிரதமர், காங்கிரஸ் எம்.பி. ஒருவருக்கு இவ்வாறாக அழைப்பு விடுத்தது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago