2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், திமுக எம்.பி. கனிமொழி, முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது, அன்னிய செலாவணி மோசடி செய்ய முயன்றதாக, அமலாக்க இயக்குநரகம் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் தயாரித்த குற்றப்பத்திரிகையை, கடந்த ஆண்டு அட்டர்னி ஜெனரல் இ.வாகனவதிக்கு அனுப்பி, சட்டப்படி முறையாக உள்ளதா என அவரது கருத்தை கேட்டி ருந்தது.
இந்நிலையில் அந்த குற்றப் பத்திரிகையில் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உரிய திருத்தங்கள் செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக மத்திய சட்டத்துறைக்கு அனுப்பி யுள்ளது. இந்நிலையில் அம லாக்க இயக்குநரகம் உரிய நடை முறைகளை பின்பற்றி விரைவில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2ஜி வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட வுள்ள இந்த குற்றப்பத்திரிகையை சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் சரிபார்த்து ஒப்புதல் வழங்கினார். அவரது ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்னிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டம் 2009ல் திருத்தப்பட்டது. இதற்கு முன் நடைபெற்ற முறைகேடுகளை இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் 2010ல் தீர்ப்பு வழங்கியது. இதன் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் டி.வி.க்கு சுற்று வழியில் ரூ.200 கோடி வழங்கப்பட் டது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் கூறுகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கனிமொழி, ராசா உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் அன்னிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கனிமொழி, ராசா ஆகியோரி டம் இந்த முறைகேடு குறித்து அமலாக்க இயக்குநரகம் ஏற் கெனவே விசாரணை நடத்தி யுள்ளது. மேலும் இருவரின் வருவாய், முதலீடுகள், சொத்து கள் தொடர்பான ஆவணங்களை அமலாக்க இயக்குநரகம் ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் மற்றும் சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சொத்துக்களை, அன்னிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அமலாக்க இயக்குநரகம் தொடங்கியுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கனிமொழி, ராசா தவிர, குசேகான் காய்கறி கள் மற்றும் பழங்கள் நிறுவன இயக்குநர் ஆசிப் பல்வா, சினியுக் பிலிம்ஸ் கரீம் முரானி மற்றும் ராஜீவ் அகர்வால் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.-பி.டி.ஐ.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
11 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago