சுதந்திர தினத்தில் காஷ்மீரில் வன்முறை: சிஆர்பிஎப் அதிகாரி பலி, 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By ஏஎஃப்பி

ஜம்மு காஷ்மீர் தலைநகர் நகரில் நேற்று தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) அதிகாரி ஒருவர் பலியானார். 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மற்றொரு சம்பவத்தில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

நகரின் நவ்ஹட்டா என்ற இடத்தில், வரலாற்று சிறப்பு மிக்க ஜும்மா மசூதிக்கு அருகில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் பெரும்பாலும் குடியிருப்புகள் நிறைந்த ஓரிடத்தில் பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் சுடத் தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில், சிஆர்பிஎப் கமாண் டிங் அதிகாரி பிரமோத் குமார் என்பவர் பலியானார். மேலும் 8 சிஆர்பிஎப் வீரர்களும் 1 போலீஸ் காவலரும் காயம் அடைந்தனர்.

இவர்களில் படுகாயம் அடைந்த 3 பேர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முதல்வர் மெகபூபா முப்தி, சுதந்திர தின விழாவில் பங்கேற் றிருந்த நேரத்தில், அதற்கு சற்று தொலைவில் இந்த தாக்குதல் நடந்தது. மேலும் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது தீவிரவாதிகள் இத்தாக்கு தலை நடத்தினர்.

ஊடுருவல் முறியடிப்பு

இதனிடையே வடக்கு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிர வாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாராமுல்லா மாவட்டம், உரி செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில், சந்தேகத்துக் கிடமான வகையில் சிலர் நடமாடு வதை கண்ட ராணுவ வீரர்கள், அவர் களை எச்சரித்து விரட்ட முயன்றனர்.

ஆனால் அவர்கள் ராணுவ நிலைகளை நோக்கி சுட்டதால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொடக்கத்தில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் மேலும் 3 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு வகை ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்