மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க மூன்று வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது 12,618 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப் பேற்றதும், இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர். 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்ததும் அவர்கள் மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். இதுகுறித்த வழக்கில், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாற்றுப் பணி வழங்க வேண்டும். தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அவர்களுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், தமிழக அரசின் மனு குறித்து அக்டோபர் 27-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட அனுமதியுடன்தான் இந்த நியமனம் நடந்துள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தர விட வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரப்பட் டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதிகள் அனில் தவே, குரியன் ஜோசப், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை படித்துப் பார்த்து, பதில் தெரிவிக்க அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து, மூன்று வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago