மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம் கட்சியான அகில இந்திய மஜ்லீஸ்-இ-இத்தாஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி இரு தொகுதிகளில் வெற்றிபெற்றுள் ளது. இதன்மூலம் தனது முஸ்லிம் வாக்கு வங்கி பறிபோயுள்ளதால் காங்கிரஸ் கட்சி கவலையடைந் துள்ளது.
ஹைதராபாத்தில் முஸ்லிம் களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம். இது, மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் மும்பையிலுள்ள 14 தொகுதிகள் உட்பட மொத்தம் 28 இடங்களில் போட்டியிட்டது. இதில், மத்திய அவுரங்காபாத் மற்றும் பைகுலா ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அவுரங்காபாத்தில் மகாராஷ்டி ராவின் பிரபல பத்திரிகையாள ரான சையது இம்தியாஜ் ஜலீல், சிவசேனா கட்சியின் வேட் பாளரைத் தோற்கடித்துள்ளார். பைகுலாவில், வழக்கறிஞரான வாரீஸ் யூசூப் பத்தான், பாஜக வேட்பாளர் மது சவாணை தோற்கடித்துள்ளார்.
காங்கிரஸுக்கு 6-வது இடம்
மத்திய அவுரங்காபாத் தொகுதி, முஸ்லிம் மற்றும் தலித் வாக் காளர்கள் அதிகம் வாழும் பகுதி ஆகும். இங்கு காங்கிரஸ் ஆறாவது இடத்துக்கு தள்ளப் பட்டு விட்டது. பைகுலாவில், காங்கிரஸ் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் 14 தொகுதிகளில் 12 தொகுதிகளை காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கைப்பற்றுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை காங்கிரஸுக்கு 5 இடங்களே கிடைத்தன. தேசியவாத காங்கிரஸுக்கு ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை.
ஆனால், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. மேலும் மூன்று தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும், ஒன்பது தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
இது, மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்குகளை அதிக அளவு பெற்று வந்த காங்கிரஸை கவலை கொள்ள வைத்துள்ளது.
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியானது, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு சில இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி ஆவார். இக்கட்சிக்கு, தெலுங்கானாவில் ஏழு எம்எல்ஏ-க்கள், ஒரு எம்.பி. உள்ளனர். உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடாகாவிலும் போட்டியிட இக்கட்சி முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago