ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜக இரட்டைவேடம்: கபில் சிபல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தனி நபர் மீதான தாக்குதல் அல்ல. இந்திய குடியரசின் மீதான தாக்குதல் ஆகும். பயங்கரவாத விஷயத்தில் எதிர்க்கட்சியான பாஜக ஆளுக்கு ஏற்றவாறு தமது கொள்கைகளை மாற்றிக் கொள்கிறது.
பயங்கரவாதம் பற்றி எப்போதும் பிரச்சினை எழுப்பும் அந்த கட்சி ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது என்ற அதிமுக அரசின் முடிவு பற்றி மவுனமாக இருக்கிறது.
நரேந்திர மோடி இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பது ஏன் என்பதுதான் எனது தெளிவான கேள்வி. பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற விவகாரம் எழுந்தால் அதில் எந்த கட்சியும் அரசும் இரட்டை வேடம் போடக்கூடாது.
இந்தியாவில் ஆட்களுக்கு ஏற்றவாறு பயங்கரவாத விஷயத் தில் தமது கொள்கைகளை கட்சிகளும் மாநில அரசுகளும் மாற்றிக் கொள்கின்றன. இது துரதிருஷ்டவசமானது.
சில இடங்களில் பயங்கரவாதம் என்ற பெயரில் போலி என்கவுன் டர் நடத்தி அப்பாவிகள் கொல்லப் படுகின்றனர். சில கட்சிகள் பயங்கரவாதிகளை கண்டித்து குரல் கொடுப்பதில்லை. குறிப்பாக முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களை கண்டித்து குரல் தரவில்லை.
மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி:
தமிழக அரசின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது. ஆயுள் தண்டனை என்பதே ஆயுள் முடியும் வரை ஆகும். பல்வேறு தீர்ப்புகளில் இதுபற்றி தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாறான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.
மணி சங்கர் அய்யர்:
தமிழக அரசின் இந்த நடவடிக்கையானது முதல்வர் ஜெயலலிதா, இந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு வர தகுதியில்லா தவர் என்பதை நிரூபித்துவிட்டது.
இந்த முடிவால் அடுத்த தேர்தலில் தமக்கு ஆதரவு கிடைக்கும் என ஜெயலலிதா கணக்கு போடுகிறார் என்றார் மணி சங்கர் அய்யர்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் எனக்கு உடன்பாடில்லை. நமது நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அதிக காலம் பிடிக்கிறது. அப்சல் குரு, பஞ்சாபில் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் குற்றவாளி கள் அனைவருக்கும் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும்.
சிவசேனை தலைவர் சஞ்சய் ரவூத்:
ராஜீவ் காந்தி ராகுலின் தந்தை மட்டும் அல்ல. இந்த நாட்டுக்கே பிரதமராக இருந்த ஒருவர். இத்தகைய வழக்குகளில் ஏனோ தானோ போக்கை கையாள்வது கூடாது என்றார் சஞ்சய் ரவூத்.
லாலு கட்சியின் ராம் கிருபாள் யாதவ்:
சாமானிய நபரை கொன்ற வர்களாக இருந்தாலும் அவர்களைக்கூட விடுதலை செய்யக்கூடாது. அப்படி இருக்கும்போது நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இப்படியா?
சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம்கோபால்:
20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் விவகாரத்தில் முடிவு எப்படி அமையப் போகிறது என்பது கேள்விகளை எழுப்புகிறது. கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் அரசு தாமதம் செய்ததுதான் பொறுப்பில்லாத செயல்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி ராசா:
தமிழக அரசு எடுத்த முடிவில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. இந்த முடிவு தமிழக அரசு எடுத்தது. கட்சி எடுத்ததல்ல.
ச்ச நீதிமன்றம்தான் தண்டனையை குறைத்தது. அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு விரும்பினால் அப்படியே செய்யலாம் என்று சொன்னதும் உச்ச நீதிமன்றமே என்றார் ராசா.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
31 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago