‘தூய்மையான இந்தியா' பிரச்சாரம் தொடங்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், இப்பிரச்சாரத்துக்குக் கிடைத்து வரும் ஊக்கம் இறுதி வரை வெற்றிகரமாகத் தொடர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
‘தூய்மையான இந்தியா' பிரச்சாரத்துக்குக் கிடைத்து வரும் ஊக்கம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஊக்கம் பிரச்சாரத்தின் இறுதி நிமிடம் வரை கடைப்பிடிக்கப்பட வேண்டும். என்னோடு இந்தப் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் பங்கேற்றுள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
மோடியின் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்ட உடனே, கர்நாடக மாநிலத்தின் ஹாசன் ரயில் நிலையத்தைச் சுத்தம் செய்யக் கிளம்பிவிட்டார் தேவே கவுடா என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி ஜெயந்தி தினத்தன்று தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரத் தில் பல்வேறு துறைகளின் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்துக்காக சுமார் ரூ.2 லட்சம் செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்சாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago