துயரத்தில் துடிக்கும் விவசாயி களுக்கு உதவி செய்வதை விடுத்து, அவர்களைத் தீவிரவாதி கள் போல மத்திய அரசு நடத்து கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘‘துயரத்தால் விவசாயிகள் தவித்து வரு கின்றனர். போராட்டம் மூலம் தங்களது நிலைமையை உணர்த்த முயற்சிக்கும் விவசாயிகளை மத்திய அரசு அடக்க முயற்சிக் கிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்காமல் தீவிர வாதிகளைப் போல நடத்துகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே குறைந்தபட்ச ஆதார விலையுடன், உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை விற்க விவசாயிகளுக்கு உரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதமும் அனுப்பி வைத்துள்ளார். அதில் விரைவில் தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago