ரண்வீர் சேனா தலைவரின் மகன் பிஹாரில் போட்டி

By செய்திப்பிரிவு

பிஹாரின் ரண்வீர் சேனா அமைப்பின் தலைவர் பிரம் மேஷ்வரின் ஒரே மகனான இந்து பூஷண், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அகில இந்திய ராஷ்டிரிய வாதிகள் விவசாயிகள் சங்கத்தின் தலைவரான இவர், ஆராவின் தொகுதியில், தேசிய கிசான் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிஹாரின் உயர்சமூகங்களில் ஒன்றான பூமியார் சார்பில் நக்சலைட்டுகளை எதிர்த்து தொடங்கப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்புதான் ரண்வீர் சேனா. ஆயுதம் ஏந்திப் போராடிய இதன் நிறுவனரான பிரம்மேஷ்வர், கைதாகி சிறைவாசத்திற்குப் பின் 2004 தேர்தலில் ஆரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த வருடம் அவர் இறந்து விட்ட நிலையில் அவரது மகன் இந்தமுறை தேர்தலில் போட்டியிடுகிறார்.

இங்கு, பாரதிய ஜனதா கூட்டணியுடன் வென்ற ஐக்கிய ஜனதா தளத்தின் மீனாசிங், எம்.பி.யாக உள்ளார். இந்தமுறை இருவரும் தனியாக போட்டியிடுவதால், இவர்களுக்கு கிடைக்கும் வாக்குகளை இந்து பூஷண் பிரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ராஷ்டிரிய ஜனதாவின் பகவான்சிங் குஷாவாவை வெற்றி பெறச் செய்யலாம் எனவும் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்