திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

By என்.மகேஷ் குமார்

திருமலை ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி கள் நடைபெற்றன. இதனால் காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருமலையில் ஏழுமலையான் கோயிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, தெலுங்கு வருட பிறப்பு, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனிவரை ஆஸ்தானம் ஆகிய 4 முக்கிய நாட்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம்.

வைகுண்ட ஏகாதசி வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளதால், நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அப்போது, ஆகம விதிகளின்படி மூலவர் சிலை முழுவதும் மூடப்பட்டது. பின்னர் பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், பச்சை கற்பூரம் போன்ற வாசனை திரவியங்களால் கற்பகிரகம், கொடி மரம், பலி பீடம், தங்க விமான கோபுரம், கோயில் வளாகத்தில் உள்ள சன்னதிகள் ஆகிய அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன.

இதனால் நேற்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்