லோக்பால் மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம்

By செய்திப்பிரிவு

நீண்ட இழுபறிக்குப் பின்னர் லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

சமாஜ்வாதி வெளிநடப்பு:

பெரும்பாலான கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க, எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே சமாஜ்வாதி கட்சி வெளிநடப்பு செய்தது. லோக்பால் சட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாலேயே அதை எதிர்ப்பதாக சமாஜ்வாதி கட்சியினர் தெரிவித்தனர்.

கபில் சிபல் கருத்து:

விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் லோக்பால் மசோதா அமைந்துள்ளது. லோக்பால் சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணையில் எந்த வகையிலும் அரசு தலையீடு இருக்காது. எனவே, லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையும் என்றார்.

அருண் ஜெட்லி:

எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசுகையில், அரசியல் சூழல் மாறியதால் மத்திய அரசின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு காட்டும் ஆர்வம் வரவேற்கத்தக்கது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்