எம்எல்ஏ மறைவால் ஆந்திர பட்ஜெட் தள்ளிவைப்பு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ பூமா நாகிரெட்டி மறைவைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டம், நந்தியாலா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூமா நாகிரெட்டி (53). இவர் நேற்று முன்தினம் காலை ஆள்ளகட்டா வில் உள்ள தனது வீட்டில் நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை யடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே ஆந்திர சட்டப் பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்தது. பூமா நாகிரெட்டி மறைவால் பட்ஜெட் நாளை புதன்கிழமை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் அறிவித்தார்.

பூமா நாகிரெட்டி 1991-ல் முதன்முறையாக ஆள்ளகட்டா தொகுதியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சட்டப்பேர வைக்கு தேர்வு செய்யப்பட்டார். நந்தியாலா தொகுதியில் இருந்து 3 முறை மக்களவைக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகனும் 2 மகள் களும் உள்ளனர். ஒரு மகள் அகிலா பிரியாவும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்