நாகாலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவரை வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையொட்டி வெடித்த கலவரத்தில் போராட்ட நபர் ஒருவரும் உயிரிழந்தார்.
பிப்ரவரி 23-ம் தேதி நாகாலாந்தின் திமாப்பூரில் நாகா பழங்குடியினப் பெண்ணை வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் பல முறை பாலியல் வல்லுறுவுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விசாரணைக்காக திமாப்பூர் சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குற்றவாளியின் பெயர் பரீத் கான் என்றும், அவர் வங்கதேசத்திலிருந்து முறைகேடான முறையில் புகுந்து நாகாலாந்தில் தொழில் செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பழங்குடியின பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதால், நாகாலாந்து மக்கள் கடுமையான கோபமடைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வியாழக்கிழமை நடந்த போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் 4000-த்துக்கும் அதிகமானோர் திரண்டனர்.
போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒரு பிரிவினர் வாகனங்களை தீயிட்டு எரித்தும் கடைகளை உடைத்தும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகையை பீய்த்து அடித்தனர்.
அப்போது திடீரென போலீஸாரை தாக்கிவிட்டு சிறைக்குள் புகுந்த பொதுமக்களில் பலர், காவலில் அடைக்கப்பட்டிருந்த நபரை நிர்வாணமாக வெளியே இழுத்து வந்து, அவரது சரமாரியாக அடித்து தாக்கினர்.
"பொதுமக்கள் அடித்து தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்தார். இதனை அடுத்து நாங்கள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்து அந்த நபரின் உடலை மீட்டோம். இதில் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார்" என்று காவல்த்துறை அதிகாரி தெரிவித்தார்.
திமாப்பூரில் பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராஜ்நாத் விளக்கம்
திமாபூரின் சட்டம் ஒழுங்கு குறித்து நேற்று (விழாகக்கிழமை) மாலை அவசர அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொது மக்கள் வன்முறையில் ஈடுப்பட்டு சட்டத்தை கையில் எடுத்த செயலுக்கு அமைச்சரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாகாலாந்து முதல்வர் செலியாங் டெல்லியில் உள்ல நிலையில், இந்த அவசரக் கூட்டம் அவர் இல்லாமல் நடந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைமை மோசமடைந்த காரணம் குறித்து நியமிக்கப்பட்ட குழு விரிவான அறிக்கை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு தலையிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசும் ஒழுங்குப்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago