தெலங்கானா மாநிலத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீஸ் எஸ்ஐ தற்கொலை

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் பணியாற்றிவந்த காவல்துறை உதவி ஆய்வாளர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், பக்க மந்திரகூடம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (45). இவர் தற்போது மேதக் மாவட்டம், குக்குநூறு பல்லி போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று அதிகாலை 3.30 மணி யளவில் தான் குடியிருக்கும் காவல்துறை குடியிருப்பு பகுதி யில் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் ராமகிருஷ்ணா உருக்கமாக எழுதிய கடிதம் காவல்துறையிடம் கிடைத் துள்ளது.

அந்த கடிதத்தில், ‘உயர் அதிகாரிகள் என் மீது அளவுக்கதிகமாக பணிச் சுமையை சுமத்துகின்றனர். அவர்களது ‘டார்ச்சர்’ தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தற்கொலை செய்துகொள் கிறேன்’ என எழுதி உள்ளார்.

இறப்பதற்கு 2 நாட்கள் முன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அவரது சொந்த ஊருக்கு அனுப்பிய ராமகிருஷ்ணா, தான் தனிமையில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இறப்பதற்கு சில மணி நேரம் முன் தனது மனைவிக்கு போன் செய்து, மேலதிகாரிகளின் ‘டார்ச்சர்’ தாங்க முடியவில்லை என்றும், இதன் காரணமாக வேலையை விட்டு விடலாமென இருக்கிறேன் எனவும் கூறி உள்ளார்.

இது குறித்து குக்குநூறு பல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்