கழிப்பறை கட்டித் தருகிறேன் வந்து விடு! - நீதிமன்றத்தில் மனைவியிடம் கெஞ்சிய கணவர்

கழிப்பறை இல்லாததால் கோபித்து தாய்வீட்டுக்குச் சென்ற மனைவியைத் திரும்ப அழைத்து வருவதற்காக கழிப்பறை கட்டித் தரத்தயார் என கணவர் ஒருவர் நீதிமன்றத்தில் சத்தியம் செய்த சுவாரசியமான சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் முண்ட்லானா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ்கரண் மாளவியா (30). இவரது மனைவி சவிதா (27). இவர்கள் இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கணவரிடம் கோபித்துக் கொண்டு இரு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார் சவிதா.

பின்னர், கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசார ணையின்போது தான், கணவர் வீட்டில் முறையான கழிப்பறை வசதி இல்லாததால்தான் சவிதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. முறையான கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்காதவரை கணவர் வீட்டுக்குத் திரும்பமாட் டேன் என சவிதா அண்மையில் குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் முறையான கழிப்பறைக் கட்டிக் கொடுக்கிறேன்’ என நீதிமன்றத்தில் தேவ் கரண் வாக்குறுதி அளித்தார்.இதையடுத்து கணவருடன் செல்ல சவிதா சம்மதம் தெரிவித்தார்.-

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE