ஓம் பிரகாஷ் சவுதாலா ஜாமீனுக்கு எதிராக சிபிஐ அவசர மனு

By பிடிஐ

ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தில், ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஓம் பிரகாஷ் சவுதாலா சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

சவுதாலாவின் தம்பி பிரதாப் சிங் கடந்த 1-ம் தேதி மரணமடைந்ததை அடுத்து இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜாமீனில் விடுவிக்க கோரியிருந்தார்.

இதை ஏற்று நீதிமன்றம் அவருக்கு மூன்று வாரம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஜாமீனை நீட்டிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சவுதாலா மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு அக்டோபர் 17 வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சவுதாலா ஜாமீன் விதிமுறைகளை அத்துமீறியுள்ளதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை அவசர மனுவாக கருதி இன்றே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சிபிஐ தரப்பு தெரிவித்தது. இதனை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம் மனுவை இன்றைக்கே விசாரிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்