பெண்ணின் நிர்வாணப் படம் என்பதாலேயே அது ஆபாசமாகி விடாது: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

பாலியல் உணர்வை தூண்டுவதாக இருந்தால், நிர்வாணப் படத்தை ஆபாசமானது எனலாம். மற்றபடி, நிர்வாணப்படம் என்பதால் மட்டுமே அது ஆபாசமாகிவிடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜெர்மனி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பார்பரா பெல்டஸ் என்ற பெண் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்றை பத்திரிகை ஒன்று 1993ல் வெளியிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், இந்த தீர்ப்பை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.

மேலும், சம்பந்தப்பட்ட பத்திரி கைக்கு எதிரான வழக்கையும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்தது.

தீர்ப்பு விவரம்:

ஆபாச எண்ணத்தை தூண்டு வதாக உள்ள பாலியல் வக்கிர படங்களை ஆபாசமாக கருத லாம். தீய எண்ணத்தை காட்டுவதா கவும் பாலியல் வெறியை தூண்டு வதாகவும் இருக்கும் படங்களை ஆபாச படங்களாக கருதலாம். அதுவும் அந்த படங்களின் பின்னணி மற்றும் தன்மையைப் பொறுத்ததாகும்.

நிகழ் சமூகத்தின் தரத்தை வைத்து, சராசரி நபரின் கண் ணோட்டத்தில் ஆபாசத்தை எடை போடவேண்டும். காலத்துக்கேற்ப ஆபாசம் பற்றிய கோட்பாடு மாறும்.

ஒரு காலத்தில் ஆபாசமாக கருதப்படுவது பிறிதொரு காலத்தில் ஆபாசமாக கருதப்படமாட்டாது.

தனக்கு நிச்சயிக்கப்பட்ட கருப்பு இன பெண் பார்பரா பெல்டஸுடன் நிர்வாண கோலத்தில் பெக்கர் இந்த படத்தில் இருக்கிறார்.

நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், காதலுக்கு ஆதரவு தரவேண்டும் என்ற செய்தியை சமூகத்துக்கு தெரிவிக் கும் அடையாளமாகவே இந்த படம் அமைந்திருக்கிறது.

நிறம் முக்கியமல்ல. நிறத்தைவிட காதலே பிரதானமானது என்பது இந்த புகைப்படம் முன்வைக்கும் செய்தி. வெள்ளை நிறத்தவருக்கும் கறுப்பு இனப் பெண்ணுக்கும் இடையேயான காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிய உதவி யிருக்கிறது.

எனவே பத்திரிகையில் வந்த செய்தி, படத்தை அது சொல்ல வந்த நோக்கத்தை புரிந்து மதிப்பிட வேண்டும். அதன்படி பார்த்தால் ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட் மற்றும் ஆனந்த பஜார் பத்திரிகையில் வெளியான இந்த படம், கட்டுரையை ஆட்சேபத்துக்குரியது என சொல்ல முடியாது. பார்பரா பெல்டஸின் மார்பகமானது போரிஸ் பெக்கரின் முழங்கைகளால் மறைக்கப்பட்ட இந்த படம் இருக்கிறது. இது அரை நிர்வாண புகைப்படம்தான். ஆனால் இந்த படத்தை எடுத்தவர் வேறு யாருமல்ல. பார்பராவின் தந்தை. மேலும் இந்த படம் உள்ள ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட், மற்றும் ஆனந்த பஜார் பத்திரிகையானது யார் கைக்காவது கிடைத்து அந்த படத்தை பார்த்தால் அது அவர்களது ஆபாச வெறியை தூண்டிவிடப் போவதில்லை.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நன்கு யோசித்து செயல்பட்டு எந்த பின்னணியில் இந்த படம் காட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

ஜெர்மன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் ஜெர்மனியில் காணப்படும் நிறவெறி, பாகுபாடு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் போரிஸ். ஜெர்மனியில் நிலவும் நிறவெறி பற்றி போரிஸ் பெக்கர் தெரிவித்த எதிர்ப்பு கருத்துகளை இந்த கட்டுரை கூறுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த படம் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டென் பத்திரிகையில் வெளியானது.. பிற்பாடு ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட், ஆனந்தபஜார் பத்திரிகையில் 1993ல் வெளியானது.

இதை எதிர்த்து சம்பந்தப்பட்டவர் கள் மீது கொல்கத்தாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் புகார் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட், பத்திரிகைகளின் ஆசிரியர், வெளியீட்டாளர் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு அழைத்தார்.

அதைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பத்திரி கையும் பிறரும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யாததால் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்