காஷ்மீரில் ராணுவ வீரர், பொதுமக்கள் யார் உயிரிழந்தாலும் தேசத்தின் இழப்புதான்: வானொலி உரையில் பிரதமர் மோடி

By விகாஸ் வாசுதேவா

இன்றைய மன் கி பாத் வானொலி உரையில் பேசிய நரேந்திர மோடி, காஷ்மீரில் ராணுவ வீரரோ, பொதுமக்களோ யார் உயிரிழந்தாலும் அது தேசத்துகு ஏற்படும் இழப்புதான் என்று பேசினார்.

மன் கி பாத் வானொலி உரையில் ஒலிம்பிக் சாதனை வீராங்கனைகளான சாக்‌ஷி, சிந்து, திபா கர்மாகர் ஆகியோரு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி.

அவர் மேலும், ஹாக்கி முன்னாள் வீரர் தயான் சந்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதாவது நாளை தயான் சந்தின் பிறந்த தினம் இது தேசிய விளையாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தயான் சந்த் பற்றி மோடி தனது உரையில் கூறும்போது, “விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமளிப்பவராகவும் தேசப்பற்று மிக்கவராகவும் தயான் சந்த் திகழ்கிறார்.ஆக29 தயான்சந்த் பிறந்த நாள், தேசிய விளையாட்டுநாளாக கொண்டாடப்படுகிறது.இந்த தருணத்தில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.கடந்த 1928, 1932, 1936 ஒலிம்பிக்கில் இந்திய பதக்கம் பெற முக்கிய பங்காற்றினார்” என்றார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரரோ அல்லது பொது மக்கள் யார் இறந்தாலும், அது இந்தியாவின் இழப்பு தான்.காஷ்மீரில், அப்பாவிகளை பயன்படுத்தி கலவரத்தை தூண்டுபவர்கள், என்றாவது ஒரு நாள் அவர்களுக்கு பதில் கூறியாக வேண்டும்.

தூய்மை இந்தியா குறித்த குறும்பட போட்டியில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு காந்தி ஜெயந்தி அன்று விருது வழங்கப்படும்.கங்கை நதியோர கிராமங்களின் தலைவர்கள், கங்கை நதிக்கரையை அசுத்தம் செய்ய விட மாட்டோம் என உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும்.

ரியோ ஒலிம்பிக்கில் அனைத்து பிரிவுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றது ஒரு நல்ல செய்தி. ரியோ ஒலிம்பிக்கில் நாம் பதக்கம் பெற்றுள்ளோம். யாருக்கும் நாம் குறைந்தவர்கள் அல்ல என்பதை நமது மகள்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். விளையாட்டிற்கு முக்கியத்துவம் என்ற நிலையில் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். விளையாட்டிற்கு ஊக்கம் தேவைப்படுகிறது. இதற்கு பொது மக்களின் பங்களிப்பு அவசியம். இந்திய மக்கள் பிரதமருக்கு ஒலிம்பிக் குறித்து கடிதம் எழுதுவது பெருமையளிக்கிறது. இது கிரிக்கெட்டை போல் மற்ற விளையாட்டுகளுக்கும் மக்கள் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.

ரியோவில் பெண்கள் இந்தியாவை பெருமையடைய வைத்துள்ளனர் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப திறமை வெளிப்படவில்லை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் பல பிரிவுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர் ஆனால் சில வீரர்கள் தேசிய அளவில் வெளிப்படுத்திய தங்களது திறமையை, ரியோவில் வெளிப்படுத்த தவறினர் சிந்து, தீபா, சாக்ஷி இந்தியாவை பெருமையடைய வைத்துள்ளனர். தீபா கர்மாகர், லலிதாபாபர், அபிநவ்பிந்தரா, விகாஸ் கிருஷ்ணன் யாத்வ சிறப்பாக தங்களது திறமையை ஏற்படுத்தினர். விளையாட்டில் பலபிரிவுகளில் கவனம் செலுத்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒலிம்பிக்கில், சிறப்பான முடிவுகள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள புதிய விளையாட்டு குழு எடுக்கும்.

நமது பாரம்பரியமான களிமண்ணால் சிலைகள் தயாரிக்கும் முறையை ஏன் நிறுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி மற்றும் துர்கா பூஜையின் போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் மட்டும் தயாரியுங்கள். துர்கா பூஜை, விநாயகர் சதுர்த்தி குறித்து பலர் எனக்கு கடிதம் எழுதினர். சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து தங்களது கவலையை என்னிடம் தெரிவித்தனர்.விநாயகர் சதுர்த்தி மற்றும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும்.

அன்னை தெரசா ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார். செப்., 4ம் தேதி பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட உள்ளது. இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையளிக்கக்கூடியது. அந்த விழாவில் சுஷ்மா கலந்து கொள்ள உள்ளார்.

செப்., 5 ஆசிரியர்கள் தினம் மட்டுமல்ல. கற்பதற்கான தினமும் கூட. நமது வாழ்வில்,ஆசிரியர்களும் தாயை போன்றவர்கள். அவர்கள் தங்களது வாழ்க்கையை மாணவர்களுக்காக செலவிடுகின்றனர். ஆசிரியர் தினம் வரும் நிலையில், சிறந்த ஆசிரியராக விளங்கிய சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். விளையாட்டில் கொண்ட பக்தி மற்றும் தனது மாணவர்களின் வெற்றிக்கு காரணமான கோபிசந்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின் கோபிசந்திற்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கின்றன. சிறந்த ஆசிரியர் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.ஆசிரியர்களுடனான உங்களது புகைப்படம் மற்றும் சிறந்த அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்