புதிய செலவினக் குறைப்பு நடவடிக்கைகள்: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திட்டமிட்டப்படாத செலவினங்களில் 10 சதவிகிதத்தைக் குறைக்கும் வகையில், மத்திய அரசு புதன்கிழமை புதிய செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், “மத்திய அரசின் உயரதிகாரிகள் உள்நாட்டு விமானப் பயணங்களை 'எக்கனாமிக் க்ளாஸ்'சில் மட்டுமே மேற்கொள்வர்.

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அரசின் கருத்தரங்குகள் நடைபெறுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. அத்துடன், புதிய வாகனங்களை வாங்குவதும் தடை செய்யப்படுகிறது.

மேலும், செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசில் புதிய நியமனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார் ப.சிதம்பரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE