ஹரியாணா சட்டசபை தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் ‘ஜாட்’ சமூகம்

நாளை நடைபெறவிருக்கும் ஹரியாணா சட்டசபை தேர்தலில் அம்மாநிலத்தின் ஜாட் சமூகமே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரியாணா மாநிலம், பஞ்சா பில் இருந்து 1966-ம் ஆண்டு பிரிந் தது. அப்போதிருந்தே, அரசியல் மற்றும் அரசுப் பணிகளில் ஜாட் சமூகத்தினரே பெரும்பான்மை யாக இடம்பெற்றுள்ளனர்.

ஹரியாணா முதல்வர்களாக இருந்தவர்களில் ராவ் விரேந்தர் சிங், பாக்வத் தயாள் சர்மா மற்றும் பஜன் லால் ஆகிய மூவர் தவிர அனைவருமே ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான்.

இம் மாநிலத்தில் அரசு மற்றும் நீதிமன்றங்களையும் மிஞ்சும் வகையில் பஞ்சாயத்துக்களை கூட்டி, முக்கியப் பிரச்சினைகளில் முடிவு எடுப்பதும் ஜாட் சமுதாயத் தின் ‘காப்’ பஞ்சாயத்துகளே.

இதனால், இங்கு போட்டியிடும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஜாட் சமுதாயத்தினரை சேர்ந்த வர்களையே பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.

ஜாட் அல்லாத சமுதாயத் தினரை ஆதாரமாக கொண்டு ஹரி யாணாவில் வளர்ந்த பாஜகவும், ஜாட் சமுதாயத்தினரையே வேட் பாளர்களாக முன்னிறுத்தியுள் ளது. ஜாட் சமூகத்தின் முக்கிய தலைவரான விரேந்தர் சிங் என்பவரை தம் கட்சிக்குள் இழுத் துள்ள பாஜக, வாக்குகளைக் கவர அவரையே அதிகமமாக முன்னிறுத்தி வருகிறது.

இங்கு தொடர்ந்து 2-வது முறை யாக ஆட்சியிலுள்ள காங்கிரஸ், மற்றும் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளும் ஜாட் வாக்குகளையே நம்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கு இன அரசியலில் இருந்து விலகி போட்டியிட்ட கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு மக்களவை தேர்த லில் ஒரு தொகுதி கூடக் கிடைக்க வில்லை. எனவே, அது ஹரியாணா வின் சட்டசபை தேர்தலில் விலகி நிற்கிறது. ஜாட் சமுதாயத்தினர் அல்லாத வாக்குகளை நம்பி உள்ள ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ் உட்பட ஒருசில சிறிய கட்சிகளால் வாக்குகள் பிரியுமே தவிர, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக் காது என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE