பாகிஸ்தான் தாக்குதல் அச்சுறுத்தல்: எல்லையில் 30,000 மக்கள் வெளியேறினர்

By பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எல்லைப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30,000 மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

ஜம்முவின் கத்வா, சம்பா ஆகிய மாவட்டங்களின் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மாதம் அக்டோபர் 1-ம் தேதி முதல் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் நடத்திய தாக்குதலில் வீரர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 80-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

2003-ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே புதன்கிழமை இரவும் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் நடந்தன. இதில் கிராமவாசிகள் 5 பேர் காயமடைந்தனர். எல்லையில் நிலவும் தொடர் உயிர் மற்றும் பொதுச் சேதங்களால் காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராமவாசிகள் அங்கு வாழ அச்சமடைந்து தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர்.

இதுவரை ஜம்மு, கத்வா, சம்பா எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 30,000-க்கும் அதிகமான மக்கள் பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்காக ஆங்காங்கே மறுவாழ்வு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சு தாக்குதலில் ஹிராநகர், ராம்கர், ஆர்.எஸ்.புரா, கனாசக், பர்க்வால், சம்பா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்