டெல்லியில் வெகு நாட்களாக தேடப்பட்டு வந்த ரவுடி கும்பல் தலைவன் உள்பட 3 குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொலை வழக்குகள், ஆள் கடத்தல் வழக்கு, வழிப்பறி என 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கும்பல் தலைவன் சுரேந்தர் மாலிக் என்ற நீட்டு டபோடாவை பிடிக்க உதவும் நபருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில் வசந்த் கன்ச் என்ற பகுதியில் நீட்டு டபோடியாவும் அவரது சகாக்களும் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அப்பகுதியை காவல்துறை சிறப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். 3 பேரையும் சரணடையுமாறு தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் கூறியதை சற்றும் சட்டை செய்யாத குற்றவாளிகள் 3 பேரும் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து காரில் தப்பிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டதில் நீட்டு டபோடாவும், அவருடன் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago