கடந்த 2006-ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு சி.சிவ சங்கரனை கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து 2ஜி ஊழலை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க 2ஜி நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என மாறன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் இரண்டு தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டது. 2ஜி ஊழல் வழக்குக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. எனவே, இந்த மனுவை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. வரும் செப்டம்பர் 6-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago