டெல்லியில் புதிய அரசு அமையுமா?- எம்எல்ஏ-க்களிடம் கருத்து கேட்பு; ராஜ்நாத்தை சந்தித்த பிறகு நஜிப் ஜங் அறிவிப்பு

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் புதிய அரசு அமைவது குறித்து அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என துணைநிலை ஆளுநர் நஜிப் ஜங் கூறியுள்ளார்.

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியை அழைக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அதன் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், நேற்று மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர், டெல்லியில் புதிய அரசு அமைவது தொடர்பாக அனைத்து கட்சி எம்எல்ஏக்களை அழைத்து ஆலோசனை கேட்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கண்டனம்

இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “குடியரசுத் தலைவர் ஆட்சி மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், அதை மேலும் ஒத்திவைக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆலோசனையை ஏன் நேற்றே (புதன்கிழமை) நடத்தவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்