வேட்பாளரின் தேர்தல் பிரச்சார செலவு உச்ச வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு

By செய்திப்பிரிவு

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக அதிக பட்சம் ரூ.40 லட்சம் வரை செல விட முடியும். இது கடந்த 2009-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இருந்த அளவைவிட ரூ.15 லட்சம் கூடுதலாகும்.

இதுகுறித்து மேற்குவங்க இணை தலைமை தேர்தல் அதிகாரி சைபல் வர்மன் கூறியதாவது: கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது, வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார செலவுக்கான உச்சவரம்பு ரூ.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இது 2011-ம் ஆண்டு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தல்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதன்முறையாக அடுத்த பொதுத் தேர்தலில் இது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது என்றார்.

"எனினும், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், வேட்பாளரின் பிரச்சார செலவுக்கான உச்சவரம்புத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததாக தேர்தல் செலவுக்கான சிறப்பு அதிகாரி அமித் ராய் சவுத்ரி கோல்கத்தாவில் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் செலவை கண்காணிப்பதற்காக பறக்கும் படை, ஓரிடத்திலிருந்து கண் காணிக்கும் குழு, வீடியோ கண்காணிப்புக் குழு ஆகியவை தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்