இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தனக்கு எதிராகத் தொடரப்பட்ட சதி வழக்கில் தவறாக வழக்கு போட்ட போலீஸார் மீது நடவடிக்கை கோரி 23 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
கிரயோஜெனிக் இஞ்ஜின் பணிகளில் பணியாற்றிய நம்பி நாராயணன் உளவு பார்த்தல் மற்றும் சதி வழக்கில் 1994-ம் ஆண்டு கைது செய்யப்பட்டது அப்போது பரபரப்பானது. இந்த வழக்கு விசாரணையை சிறப்பு விசாரணைக் குழுவிடமிருந்து பெற்ற சிபிஐ இந்த வழக்கை முடித்து வைக்குமாறும் நம்பி நாராயணன் மீது வழக்கு தொடர்ந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனு ஒன்றில் கோரியிருந்தது.
மேலும் தேசிய மனித உரிமை ஆணையமும் மார்ச் 2001-ல் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு சிக்கவைக்கப்பட்டதாக நம்பி நாராயணனுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதாவது இவர் மீது இத்தகைய குற்றம் சாட்டப்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சமூகத்தில் இவருக்கு ஏற்பட்ட இழுக்கு ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.
2001- மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுக்குப் பிறகு 10 ஆண்டுகள் சென்று 2011-ல் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை முடிக்குமாறு கேரள அரசு ஆணை வெளியானது.
இதனையடுத்து 2015-ல் கேரள உயர் நீதிமன்றம் மார்ச் 2015-ல் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை கோரும் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்துதான் நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வந்தது. அப்போது 76 வயதான நம்பி நாராயணன் நீண்ட காலம் போராடியுள்ளார் என்பதை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் 4 வாரங்கள் வழக்கை ஒத்தி வைக்க எதிர்த்தரப்பு கோரியது, ஆனால் இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. பிப்ரவரி 24-ம் தேதி இறுதிகட்ட விசாரணை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும் நம்பி நாராயணனை சட்ட விரோதமாகக் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கேரள அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியது.
முன்னாள் கேரள ஏடிஜிபி சிபி மேத்யூ, கே.கே.ஜோஷ்வா மற்றும் எஸ்.விஜயன் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை என்று நம்பி நாராயணன் தன் மனுவில் கோரியுள்ளார்.
23 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் நம்பி நாராயணின் போராட்டத்துக்கு பிப்ரவரி 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் நீதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago