டெல்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள திரிலோக்புரியில் இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே மூண்ட கலவரம் தொடர்பாக 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (தீபாவளி நாளில்) இரவு இரு கோஷ்டிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இதைக் கட்டுப்படுத்தினர். ஆனாலும் மறுநாள் காலையில் இது பெரும் கலவரமாக வெடித்தது. இரு பிரிவைச் சேர்ந்தவர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மத்திய பாதுகாப்பு படையினர், இரு பிரிவினரிடையே அமைதி ஏற்படுத்த முயன்றனர். அப்போது நடைபெற்ற மோதலில் 20 போலீஸார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மோதலின்போது, அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், திரிலோக்புரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மூன்றாவது நாளாக நேற்றும் உடங்கு அமலில் இருந்தது.
இதுகுறித்து டெல்லி காவல் துறை துணை ஆணையர் அஜய் குமார் கூறும்போது, “கலவரம் நடந்த அன்று எங்களுக்கு சுமார் 500 தொலைபேசி அழைப்புகள் மூலம் புகார்கள் வந்தன. இதில் 192 அழைப்புகளில் தவறான தகவல்கள் தரப்பட்டன. இவர்களிடம் விசாரணை நடத்தி இதுவரையில் 14 பேரை கைது செய்துள்ளோம். இப்போது கலவரம் கட்டுக்குள் உள்ளது” என்றார்.
இந்தக் கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியைச் சுற்றியுள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ரூ.17 மதிப்புள்ள அரை லிட்டர் பாக்கெட் பால் ரூ. 60 வரை விற்பனையானது. கடந்த தசரா பண்டிகையின்போது நடைபெற்ற ஊர்வலத்துக்குப் பிறகு அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சி புகார்
அரசியல் ஆதாயத்துக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கலவரம் நடைபெற்றுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் புகார் கூறியுள்ளார்.
திரிலோக்புரியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுனில் குமார் வைத்யா நடத்திய கூட்டம்தான் இந்தக் கலவரத்துக்குக் காரணம் என குற்றம்சாட்டி உள்ள அவர், திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago