டெல்லி தேர்தலில் பெண் வேட்பாளர்கள் நிலை என்ன?

By செய்திப்பிரிவு

டெல்லியில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 70 தொகுதிகளை கொண்ட இத்தேர்தலில் 810 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவர்களில் 70 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் பதவிக்கு ஷீலா தீட்சித்தும், பா.ஜ.க சார்பில் ஹர்ஷவர்தனும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கேஜ்ரிவாலும் போட்டியிடுகின்றனர்.

66 லட்சம் ஆண் வாக்காளர்கள், 53 லட்சம் பெண் வாக்காளர்கள், என 1 கோடியே 19 லட்சம் பேர் தங்களது வாக்குரிமையை நிறைவேற்ற உள்ளனர். தேர்தலை ஒட்டி டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

களத்தில் பெண் வேட்பாளர்கள்:

நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வேண்டும் என குரல் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியும், பாஜக-வும் டெல்லி தேர்தலில் சொற்ப இடங்களையே பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் 6 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் டெல்லியில் கடந்த 15 வருடங்களாக முதல்வராக இருந்து வருகிறார் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித்.

இதே போல், பாஜக-வும் வெறும் 5 பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. இது,பாஜக சார்பில் போட்டியிடும் 66 வேட்பாளர்களில் 7.5% மட்டுமே.புதிதாக களம் காணும் ஆம் ஆத்மி கட்சியில் 6 பெண் வேட்பாளர்கள் உள்ளனர்.

கட்சிகளின் விளக்கம்:

ஆனால் இது குறித்து பிரதான கட்சிகளான காங்கிரசும், பாஜக-வும் கூறுகையில், குறைந்த அளவில் பெண் வேட்பாளர்களை களமிறக்கியதற்கு உள் அர்த்தம் ஏதும் இல்லை. சூழ்நிலைத் தேவைக்கு ஏற்பவே அவ்வாறு களமிறக்க்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளன.

வெற்றி பெறும் தகுதியுடைய வேட்பாளர்களை தெரிவு செய்து களமிறக்கியுள்ளோமே தவிர, வேண்டும் என்று குறைந்த அளவில் பெண் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. பெண்கள் தாமாகவே முன் வந்து அரசியல் களம் காண வேண்டும் என்றே காங்கிரஸ் எப்போதும் விரும்புகிறது என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்