பிரதமர் பதவிக்கு அர்விந்த் கேஜ்ரிவால் பொருத்தமானவர் எனவும், அவரை இந்தப் பதவியில் அமர்த்துவது தமது கனவு எனவும் யோகேந்தர் யாதவ் கூறினார். சனிக்கிழமை நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அக்கட்சியின் மூத்த தலைவரான யாதவ் இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறுகை யில், "பிரதமர் பதவிக்கு நரேந்தர் மோடியும் ராகுல் காந்தியும் போட்டியிடுவது துரதிர்ஷ்டவசமானது. அவர்களை விட சிறந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, நாட்டு மக்களிடம் உள்ளது. இந்த பதவிக்கான முழு தகுதி அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இருக்கிறது" என்றார்.
இதுபற்றி அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை ஆம் ஆத்மி கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் எங்கள் கட்சியின் அமைப்பாளர் கேஜ்ரிவால் மட்டுமே" என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதனுடன், மகராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய இருக்கிறது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஆம் ஆத்மியின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேர்தலில் போட்டி இல்லை
கேஜ்ரிவால் இதுபற்றி கூறுகையில், "நான் டெல்லி வாசிகளுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட மாட் டேன். ஆனால், பிரச்சாரம் செய்வேன். என் மீது இருக்கும் பாசத்தில், பிரதமர் பதவிக்காக என்னை முன்னிறுத்த விரும்புவதாகக் கூறு கிறார்கள். பிரதமர் பதவிக்காக போட்டியிடுபவர்கள் என்னைப் பார்த்து பயப்பட தேவை இல்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago