காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மற்றும் சம்பல் காவல்துறை இணைந்து இந்தத் தாக்குதலை முறியடித்தனர்.
இதுகுறித்துப் பேசிய ஸ்ரீநகரைச் சேர்ந்த காவல்துறை செய்தித் தொடர்பாளர், ''சிஆர்பிஎஃப் முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டது. இந்த தாக்குதல் அதிகாலை 4 மணியளவில், முகாமுக்கு அருகில் இருந்த திறந்தவெளியில் இருந்து நிகழ்த்தப்பட்டது.
சிஆர்பிஎஃப் 45-வது படைப்பிரிவு மற்றும் பந்திப்போரா மாவட்ட சம்பால் காவல்துறையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தற்கொலைப்படைத் தாக்குதலை வீரர்கள் திறம்பட முறியடித்தனர்.
தேடுதல் பணி இன்னும் தொடர்ந்து வருகிறது'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago