புதுவை புதிய ஐ.ஜி. பர்வீர் ரஞ்சன் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியின் புதிய ஐஜியாக பர்வீர் ரஞ்சன் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

புதுச்சேரி ஐஜியாகப் பணி யாற்றிய ரன்வீர்சிங் கிருஷ்ணியா பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு, டிஜிபி காமராஜ் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். டிஐஜி பணியிடத்தில் இருந்த சுக்லா பதவி உயர்வில் சென்ற தனால் அவருக்கு பதிலாக பர்வீர் ரஞ்சன் ஐஜியாக பொறுப் பேற்றார்.

செவ்வாய்க்கிழமை டிஜிபி காமராஜை, பர்வீர் ரஞ்சன் சந்தித்தார். பர்வீர் ரஞ்சன், டெல்லி லஞ்ச ஒழிப்பு மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவில் இணை ஆணையராக இருந் துள்ளார். பதவி உயர்வின் மூலம் புதுச்சேரி ஐஜியாகியுள்ளார். பீஹாரைச் சேர்ந்த பர்வீர் ரஞ்சன், டெல்லியில் கேஜ்ரிவால் அரசு தரப்பில் உயர்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர். எனினும், மத்திய உள்துறை அமைச்சகம் அவரை அங்கு பணியமர்த்தாமல் புதுச்சேரிக்கு மாற்றியுள்ளது.

விரைவில் எஸ்பிக்கள் மாற்றம்

புதுவை காவல் ஆய்வாளர்கள் 8 பேர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் 5 பேர் ஆகியோர் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் இடமாற்றம் தொடர்பாக டிஜிபி காமராஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாக நடத்துவது காவல் துறையின் நோக்கம். தேர்தல்துறை உத்தரவுப்படி, சட்டம்-ஒழுங்கு பணியில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி யாற்றும் காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்படுவார்கள். விரைவில் எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்படுவார்கள்.

நகரப்பகுதிகளில் கண் காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடக்கிறது. கட்டுப்பாட்டு அறை கோரிமேட்டில் அமைகிறது. புதுவை யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கூடுதல் பாதுகாப்புக்காகக் காவல்பணிக்கு உயர் அதிகாரிகள் மத்திய அரசால் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்