செம்மரம் கடத்திய வழக்கில் 181 பேர் சிறையிலடைப்பு: மேலும் 35 பேர் கைது

By என்.மகேஷ் குமார்

சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் கைது செய்யப்பட்ட 181 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப்பகுதியில் திருப்பதி அருகே உள்ள பாகராப்பேட்டை, கடப்பா மாவட்டம், மைதுகூரு மண்டலம் பனிபெண்டா வனப்பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை நடத்திய அதிரடி சோதனையில் 159 பேர் சிக்கினர். இதனைத் தொடர்ந்து நடத்திய சோதனையில் மேலும் 22 பேர் சிக்கினர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த திரு வண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, சேலம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். கர்நாடக மாநிலம் கோலார், மைசூர் மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள செம்மரங்களையும் 2 கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 181 பேரை கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத் தினர். அனைவரையும் 14 நாட் கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அனைவரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தப்பி ஓடிய மற்றவர்களைப் பிடிக்க அதிரடிப் படை வீரர்கள், கடப்பா, சித்தூர் மாவட்ட சேஷாசலம் வனப்பகுதி களில் தீவிர சோதனை நடத்தினர். இதில் நேற்று கடப்பா மாவட்டம், பத்வேல் வனப்பகுதியில் பதுங்கி இருந்த மேலும் 35 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப் பட்டவர்கள் திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் என தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்