தங்களை தொந்தரவு செய்த இளைஞரை மூன்று இளம் பெண்கள் சேர்ந்து செருப்பால் அடித்த சம்பவம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலானது. மெஹ்ராலி - குருகிராம் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வீடியோ பதிவில் இடம்பெற்ற காட்சி இதுவே:
மெஹ்ராலி - குருகிராம் சாலையில் (எம்.ஜி.சாலை) ஓர் இளம்பெண்ணிடம் இளைஞர் ஒருவர் லேசான கைகலப்பில் ஈடுபடுகிறார். அந்தப் பெண்ணோ அவரிடமிருந்து மீள முயற்சிக்கிறார். அப்போது அந்த இடத்துக்கு மேலும் இரு பெண்கள் வருகின்றனர். ஆண் ஒருவரும் வருகிறார். மூவரும் சேர்ந்த அந்த இளைஞரை தடுக்க முயற்சிக்கின்றனர். பெண்களோ அந்த இளைஞரை வசை பாடுகின்றனர். கூடவே செருப்பால் அவரை அடிக்கின்றனர்.
வைரலான வீடியோ:
இந்த வீடியோ இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை தூரத்திலிருந்து படம்பிடித்ததாகக் கூறும் பத்திரிகையாளர் சம்பவம் எம்.ஜி.சாலையில் சனிக்கிழமை இரவு நடந்ததாகக் கூறினார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பின்னர் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலானது.
போலீஸ் விளக்கம்:
இது குறித்து அச்சரக காவல்துறை ஆய்வாளர் விகாஷ் கவ்ஷிக் 'தி இந்து'விடம் (ஆங்கில நாளிதழ்) கூறும்போது, "இப்படி ஒரு சம்பவம் நடந்ததை நாங்களும் தொலைக்காட்சி செய்தி வாயிலாகவே தெரிந்து கொண்டோம். அந்த வீடியோவின் நம்பகத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களோ இல்லை அந்த வீடியோவை எடுத்ததாகக் கூறும் செய்தியாளரோ எங்களிடம் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகளிடம் விசாரித்து வருகிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago