அமர்நாத் யாத்திரை நாளை தொடங்கவுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
காஷ்மீரின் அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக் கான பக்தர்கள் யாத்திரை மேற் கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக் கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்கி 41 நாட்கள் வரை நடக்கிறது.
இதுகுறித்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் கே.கே.சர்மா நேற்று கூறியதாவது:
இந்த ஆண்டு தீவிரவாத அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே தீவிரவாதிகள் அமர்நாத் யாத் திரையை சீர்குலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்துள் ளோம். யாத்திரை பாதையை கண் காணிக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் காஷ்மீர் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இயற்கை பேரிடர் ஏற்பட்டாலோ, உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ உதவி செய்வதற்காக எண்ணற்ற மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை நிச்சயம் அமைதியாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநில போலீ ஸாரும் அமர்நாத் யாத்திரைக்காக போதிய பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்திருப்பதாக தெரிவித் துள்ளனர். இதனால் அச்சமின்றி, மிகுந்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரையை பக்தர்கள் மேற் கொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமை சவாலாக இருப்பதால் யாத்திரை பாதையில் துணை ராணுவ படையினரும் பாது காப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவமும் தனது 5 பட்டாலியன் படைகளைப் பாதுகாப்புக்காக நிறுத்தியுள்ளது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என துணை முதல்வர் நிர்மல் சிங்கும் உறுதியளித்துள்ளார்.
250 பேரை கொல்ல தீவிரவாதிகள் சதி
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காஷ்மீர் மண்டல ஐஜிபி முனீர் கான் கூறும்போது, ‘‘தீவிரவாதிகள் 100 முதல் 150 பக்தர்களையும், 100 போலீஸ் அதிகாரிகளையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago