பாலியல் வழக்கு: காஷ்மீர் முன்னாள் அமைச்சருக்கு பிடி வாரண்ட்

By செய்திப்பிரிவு

பாலியல் வன் கொடுமை வழக்கில் சிக்கியுள்ள காஷ்மீர் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் ஷபீர் கானுக்கு எதிராக ஸ்ரீநகர் நீதிமன்ற நீதிபதி கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

பெண் டாக்டர் ஒருவரால் பாலியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் சுகாதார அமைச்சர் ஷபீர் கான் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.

குற்றச்சாட்டு:

ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு கடந்த ஜனவரி 28ம் தேதி அமைச்சர் தன்னை வரவழைத்தார் என்றும், தவறான நோக்கத்தில் அமைச்சர் தன்னை நெருங்கியபோது, தான் மிகவும் அசௌகரியமாக உணர்ந்து அறையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அப்பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.

அந்தப் புகாரின் பேரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷபீர் கான் மீது போலீஸார் கடந்த வியாழக்கிழமை பாலியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்