ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் வென்று, ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது. நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ராய்பூரில் நடைபெற்றது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் டி.எஸ்.ராவத் தலைமை வகித்தார். இதில், பாஜக மாநிலத் தலைவர் ரவீந்திரா ராய், மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பாஜக மாநில நிர்வாகிகள், ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது: இந்த முறை ஊழல் புகார் இல்லாத நேர்மையானவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநிலத்தில் எங்கள் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக தங்களின் தொகுதிக்கு எந்தவொரு பணியையும் செய்யாமல் மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க மாட்டோம். மோடி அலையால் இந்த மாநிலத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு தெரிவித்தனர்.
ஜார்க்கண்டில் உள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீது பல்வேறு புகார்கள் கூறப்படுகின்றன. பலர் தொகுதியில் வளர்ச்சிப் பணி எதையும் மேற்கொள்ளவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் பாஜகவின் வேட்பாளர்களாக பெரும் எண்ணிக்கையில் புதிய முகங்கள் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. வேட்பாளர் தேர்வுக்காக 81 சட்டசபைத் தொகுதிகளுக்கு தலா 3 பேரை மாநில நிர்வாகிகள் பரிந்துரை செய்யவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago