ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட 5 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்: தாக்குதல் நடத்தும் திட்டம் முறியடிப்பு

By என்.மகேஷ் குமார்

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 5 ஐஎஸ் தீவிரவாதிகளை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இவர்கள் பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் மாபெரும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

ஹைதராபாத் பாத்த பஸ்தி என்ற இடத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாகவும் இவர் களுக்கு இளைஞர்கள் சிலர் உதவி செய்து வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ஹைதராபாத் போலீஸாருடன் இணைந்து கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

10 இடங்களில் சோதனை

நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில் சந்தேகப் படும் வகையில் 11 இளைஞர்கள் பிடிபட்டனர். மேலும் இவர்களிட மிருந்து வெடிகுண்டு தயாரிப் பதற்கு தேவையான ரசாயனப் பொருட்கள், சீனாவில் தயாரான 2 துப்பாக்கிகள், நூற்றுக் கணக்கான புல்லட்கள், 34 சிம் கார்டுகள், 40 செல்போன்கள், 6 லேப்டாப்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முகமது இப்ரஹிம் யாஜ்தானி, இலியாஜ் யாஜ்தானி, ஃபஹாத், இர்ஃபான், ஹபீப் ஆகிய 5 பேருக்கு மட்டும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மற்ற 6 பேரும் நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

நாச வேலை

இதுகுறித்து என்ஐஏ அதிகாரி ஒருவர் ஹைதராபாத்தில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பிடிபட்ட அனைவரும் பட்ட தாரிகள். இதில் 2 பேர் பொறியாளர்கள். இவர்கள் கம்யூட்டர் நிபுணர்கள் ஆவர். இவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி கரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, ஓரிரு நாட்களில் பெங்களூரு, ஹைதரா பாத் ஆகிய நகரங்களில் 14 இடங் களில் மிகப்பெரிய நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற சார்மினார் அருகே உள்ள பாக்யலட்சுமி கோயிலில் வெடிகுண்டு வைக்கவும், மாட்டிறைச்சியை போட்டு மதக் கலவரத்தை தூண்டவும் இவர்கள் திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக ரம்ஜான் பண்டிகைக்குப் பிறகு ஷாப்பிங் மால்கள், திரையரங்கு களிலும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி உள்ளனர்.

முக்கிய பிரமுகர்கள் சிலரையும் இவர்கள் கொல்ல திட்டமிட்டிருந்தனர். கடந்த 6 மாதமாக இதற்கான பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை கைது செய்ததன் மூலம் மிகப்பெரிய நாச வேலை முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 5 தீவிரவாதி களையும் பலத்த பாதுகாப்புடன் தனித்தனி வாகனங்களில் ஏற்றி, ஹைதராபாத்தில் உள்ள நாம்பல்லி நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர் படுத்தினர். அவர்களை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி என்ஐஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

பாதுகாப்பு தீவிரம்

ஹைதராபாத்தில் ஐஎஸ் தீவிர வாதிகள் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டிருந்தது அம்பல மானதால், வரும் 6-ம் தேதி வரை ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட் டுள்ளது. இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள், விமான நிலையம், ஷாப்பில் மால்கள், பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. விமான நிலையத் துக்கு வரும் அனைவரும் கண்டிப் பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்