ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் ஜனவரி மாதத்துடன் சட்டப்பேரவைக்கான காலம் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தே விவரங்களை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் கூறியதாவது, " ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு வரும் நவம்பர் மாதம் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

காஷ்மீரில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் இழப்பு, சட்ட ஒழுங்கு நிலை, பண்டிகைகள் ஆகியனவை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளுடன் நடத்திய ஆலோசனையில் இந்த முடுவு எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து கட்டங்களாக நடக்க இருக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும்.

அதேபோல், டெல்லியில் காலியாகவுள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வரும் நவம்பர் 25 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்" என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

மேலும்